ஆதலினால் காதலிக்காதீர்கள்

அரங்கேறியது
நாடகமா அல்லது
அந்தரங்கத்தின்
சத்தியமா ?
தெரிந்து கொள்ளாமல்
விழுந்து விடாதீர்கள்
காதலில்

புன்னகையின்
ஒப்பனையில்
கண்கள் போடும்
வேடம் காதல்
பொழுது சாயும்
வேளையின்
பொய்யான
கற்பனைகள்
இது மாலை
மயக்கம்
காதல் இல்லை
கானல்
ஆதலினால்
காதலிக்காதீர்கள்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Mar-13, 4:35 pm)
பார்வை : 115

மேலே