என் உயிரோடு உறவானவன்
காலையும் நீ,மாலையும் நீ
கோடையும் நீ,மழையும் நீ
தென்றலும் நீ,புயலும் நீ
கண்ணீரும் நீ,புன்னகையும் நீ
மெய்யும் நீ,பொய்யும் நீ
வன்மையும் நீ,மென்மையும் நீ
உடலும் நீ,உயிரும் நீ
ஊணும் நீ,உறவும் நீ
இரவும் நீ,இமைகளும் நீ
தாகமும் நீ,தண்ணீரும் நீ
மலரும் நீ,முள்ளும் நீ
தாயும் நீ,சேயும் நீ
தலைவனும் நீ,தடங்களும் நீ
காவலும் நீ,கள்வனும் நீ
ஆழமும் நீ,அமைதியும் நீ
மௌனமும் நீ,மயக்கமும் நீ
இன்பமும் நீ,துன்பமும் நீ
கண்ணுள்ளே நீ,கனவிலும் நீ
என்னுள்ளே நீ,என்னவன் நீ...