நட்பைத் தேடி

அழகிய வெண்ணிலவாய் நான்,

தோழர்க் கூட்டமாய் மேகங்கள்..

முகம் மலர்ந்து நான் அழைத்தும்

தலைத் தாண்டிக் கடந்தனர்...கண்டுகொள்ளாமல்..

எனக்கென எவரும் இல்லையோ?

ஆயிரம் விண்மீன்கள் அழகாய் ஆடிவந்தாலும்,

உற்ற நண்பனாய் ஒருவன்கூட இல்லையே!

நானே அழைத்தாலும் கண்முன்னே மறைந்து போனர்;

என் மனத்தைக் கரைத்தும் போனர்!

எதை எண்ணி வருந்துவது?

எதை எண்ணி அழுவது??

அழுததன் சாட்சியோ

என் முகம் முழுதும் கறைகள்??

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:43 pm)
சேர்த்தது : indra
பார்வை : 799

மேலே