என் நண்பனுக்காக..
![](https://eluthu.com/images/loading.gif)
அந்திப் பொழுதில்
கடற்கரை மணலில்
நம் பாதச்சுவடுகள்
நான்கிலிருந்து
இரண்டாகக் குறைவதை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
காற்றும் கூட
வறண்ட கரங்களால்
தழுவுகிறது.
மனநிலைக்கும்,
காற்றின் ஈரத்திற்கும்
ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன..?
தனியாய் ஒரு நண்டு
அலைவதும்
தனிமையாய் ஒரு மீனவன்
படகு செலுத்துவதும்
வழக்கமான அழகியலுடன்
தெரியவில்லை
இப்போது..
வானில் ஓர் விமானம்
மிதந்து கொண்டிருக்கிறது...
நண்பா..
நீ செல்லும்
விமானமாய் இருக்கலாம்.