ஆசையுடன்... பருந்தும் காகமும்

ஒரு நாள்......... வானத்திலே தாய்ப்பருந்து தன் குழந்தைகளுக்கு பறக்கக் கற்று கொடுத்துக்கொண்டு இருந்த பொழுது, காகக்குஞ்சும் சேர்ந்து அப்பயிற்சியில் தானும் உயர உயர பறந்திடனும் என்ற ஆசையோடு கலந்துகொண்டது.
தினமும் பயிற்சி நடக்கும். நாளுக்குநாள் பருந்துக்குஞ்சுகளின் பறக்கும் உயரமும் அதிகரித்தது. அதுவரைக்கும் பருந்தைவிட தன்னாலத்தான் உயர பறக்க முடியும் என்று நினைத்த காகம்.......
அப்போதுதான் சிந்தித்தது, தன்னோட இறக்கை சிறியதாகவே இருக்கிறது. பருந்து மாதிரி இல்லையே......
காகமும் பருந்துடன் சேர்ந்து பறக்கிறதைப் பார்த்த மற்ற காகநண்பர்களும் பாருடா! கிடுக்கனும் உயர பறக்கிறான் என்று கேலி செய்து சிரித்தன. பருந்து குஞ்சுகளும் கேலி செய்துக்கொண்டே சுற்றின.
உயர உயர பறந்தாலும் மரக்கிளைத்தானே நமக்கெல்லாம் வீடு என்று நினைத்தது காகம். ஏனெனில் காகம் ,பருந்தும் தங்கிய மரங்கள் அருகருகே இருந்தன.
அன்று ஏனோ! வேகமாக காற்று வீசியது. ஓவென்று மழை கொட்டியது புயலோ! சூறாவளியோ! இருக்கலாம். பருந்து தங்கிய மரம் திடீரென்று தொப்பென்று வேரோடு சாய்ந்தது.
காகக்குஞ்சு வேகமாக பறந்து சென்று தாய்ப்பருந்திடம் அம்மா..... எங்கே போறீங்க.......
எனக்கு உயர உயர பறக்கக் கற்று கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் வீடில்லாமல் என்னை விட்டுவிட்டு தூரமாக போகப் போகிறீர்களா.....? எங்கள் வீடு பெரிய வீடு. நீங்களும் அங்கே வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்றது காகம் கெஞ்சலுடன்....... ஆசையுடன்.......

எழுதியவர் : Loka (22-Mar-13, 10:09 am)
பார்வை : 347

மேலே