எங்களுக்கான காதல்....
எங்களை
காணாமல் போக
செய்தது
முன்பொரு காலமோ,
அதன் பின் வந்த காலமோ
எதுவாகினும்
அதுவாகி போக
காத்திருந்தது.....
கடைசி நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கும்
காய்ந்த
சருகொன்றில்
சாட்சியாகி இருந்த
எங்களுக்கான காதல்....