பரதேசி

வீதியே என்
வாழ்நாள் வீடு
எச்சில் தான் -என்
அறுசுவை உணவு
ஊரே திட்டுது
தருதல என்று
தலையிலே தட்டுது
பரதேசி என்று
பள்ளி செல்ல
துடிக்கிறேன்
கூட்டிச்செல்ல
யாருமேயில்லை
கூடிவிளையாட
நினைக்கின்றேன்
சேந்து விளையாட
சொந்தங்களில்லை
பார்ப்போர்கள் எல்லோரும்
அம்மாவும் ஐயாவும் தான்
ஆசையாய் கூப்பிட
உறவுகள் இல்லை
நித்தம் வேதனைத்தீயில்
கண்ணீர் சிந்துகின்றேன்
என் கண்ணீரை துடைக்க
கருணையுள்ளவர்கள்
யாரும் இல்லை
முட்டை தின்ன ஆசை
கோதைக்கூட
காக்கை விடுவதில்லை
நாய்களுடன் தான் போட்டி
ஒரு சாண் வயிற்றுக்காய்
மட்டுமே
கருவிலே அனாதை
என்று தெரிந்திருந்தால்
அங்கேயே
கானல் நீராயிருப்பேன்
ஓர்
ஆண் பெண் ஆசையில்
பிறந்த எனக்கு
குப்பை தொட்டிதான்
மாளிகை வீடு
காக்கையும் நாயும் தான்
ரெத்த சொந்தம்
கடவுளே இல்லை
என் கண்ணீரை
துடைக்க
கடவுளுக்கும்
என் நிலைதான்
போல