நேற்று இரவு ...

அயர்ந்து தான் படுத்தேன்
உடனே உறங்கி விடலாம் என்று ...
இரவோ தன் நிலைமாறி
திசைகள் அனைத்திலிருந்தும்
உன் நினைவுகளை வீசி
தூக்கத்தைக் கொல்ல தொடங்கியது ...
தப்பிக்கவே வெளியில் சென்று அமர்ந்தேன் ...
இதமாய் காற்று
உன் வாசமின்றி வீசவே
மேலும் சலிப்பை உண்டாக்கியது ...
கருநிற வானில்
பளிச்சென்ற நிலவு
என் கண்களை ஈர்த்தது ...
எத்தனை நாட்கள்
அந்த மொட்டை மாடியில்
நிலவின் மடியில் அமர்ந்திருப்போம் ...
பேசிய கதைகள் எல்லாம் கனவுகளாக ...
காட்டிய அன்பெல்லாம் ஏக்கங்களாக ...
இனி வரும் நாட்கள் எல்லாம்
உன் நினைவுகளாக ...
வந்து வந்து போகும்
அந்த நட்சத்திரங்களின் வெளிச்சம்
உன் சிரிப்பை நினைவு படுத்தியது ...
நான் எப்பொழுதும்
உன்னைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருக்கிறேன் ...
நீ இந்நேரம்
என்ன செய்து கொண்டிருப்பாயோ ?
என்று மணம் ஏங்கியது ...
சோகங்களை எல்லாம்
எழுத்துகளாய் காகிதத்தில்
இறக்கி வைத்து விட்டு
படுத்தேன் காலை ஏழு மணிக்கு ...
இனி தினமும்
இப்படித் தான்
என்று தெரியும் ...
மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்
அது உன்னால் என்பதால் ...