பாலில் கலப்படம் - அதிர்ச்சி தகவல்...!!
சிந்தெடிக் பால் - செயற்கைப் பால்..!
நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால் தற்போது வட மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம் உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது எனக் கூறினார் இத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்,
உ.பி, ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் அதிகாரி,
சிந்தெடிக் பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா ?
1) காஸ்டிக் சோடா.
2) தண்ணீர்.
3) ரீபைன்ட் ஆயில்.
4) உப்பு.
5) சர்க்கரை.
6) யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை நிஜமான பாலுடன் கலந்து விட்டால் இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்,
பாலை சோதனை செய்யும் நிமித்தம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருக்கிறார் அதிகாரி. அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு டிடர்ஜெண்ட் சோப் பவுடருக்கு ஏக டிமாண்ட் இருப்பதைக் கண்டு இருக்கிறார், இந்த டிமாண்டிற்க்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.
இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால் அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம், ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற்கொண்ட 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை அதிகாரி கண்டு பிடித்துள்ளார்,
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு கொழுப்பு இருப்பது போல காட்ட பாமாயில் கலந்து விடுகின்றனராம்,
இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க ஹோமோஜினைஸ் என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி பாமாயிலை, குளோபுயூல்ஸ் சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!