கணவு

கண்ணே மணியே ராஜா
என் பட்டு மேனி ரோஜா
கல்கண்டு மொட்டே
தாவி விளையாடும் அருவியே
முத்தே முத்தாரமே
முத்தமிட்டு செல்லும்
மான்குட்டியே
தத்தி விளையாடும்
காற்றே
காலையில் தோன்றும் கதிரவனே
இங்கே வாடா செல்லம் -என்று
கட்டி அணைத்தேன் கனவிலே
சிலிர்த்து எழுந்தேன் நினைவிலே !!!

எழுதியவர் : விருத்த இலட்சுமி (3-Apr-13, 1:35 am)
பார்வை : 113

மேலே