ஈழம்...................
உதிரம் அது நதியாய் ஓட
விழி நோக்கிய திசையோடு
வேடிக்கை பார்ப்போர் சிலர்,
உணர்வுகளின் கிளர்ச்சியில் விழித்தோர் சிலர்...........
மாற்றான் என்பதே காரணமா?
மனிதநேயம் மறை(ற)ந்து போக
பேதங்கள் நிறைந்ததால்
பேதமை நிகழ்வுகள்...................
சிதைக்கப்படும் மனிதம்
சீறும் உணர்வுகள் தீக்குச்சியின் பிடியில்...........
தீக்குச்சியிலும் ஒலிந்திருக்கும் ஊளல்
கொழுந்துவிட்டெரியும் தீயும்,
அனைந்து வரும் புகையும்,
கலந்தே நம் உனர்வுகளிலும் மாற்றங்கள்
கண்ணீர் சிந்தும் விழிகள் சில
கருவிழியில் விழும் பிம்பம் என சிலர்
சிதைக்கப்படும் இவன் ஈழத்தமிழன்
சிதைக்கும் அவன் மனிதம் மறந்த மிருகம்
வேடிக்கை பார்க்கும் சிலர்
உணர்வுகளின் கிளர்ச்சியில் சிலர்
சிலர் சேர்ந்த இந்த சமுதாயத்தில்
- நாம்????????????????