உறவுகள்...?உணர்வுகள்...?

காலத்தின் மாற்றம்
மனிதன் மனதிலே
தீராத ஏக்கம்...
உறவுகள் எங்கே?
உணர்வுகள் எங்கே ?
எல்லாம் எந்திரமயம் ...

அன்று மனிதன்,
இயக்கியது இயந்திரம்..
இன்று மனிதனே
இயங்கும் எந்திரம்...

சில விஞ்ஞானிகள்
செய்த தந்திரம்
பல விஞ்ஞானமானது
புரியா மந்திரம்....

எந்திரத்திற்கு உணர்வூட்டும்
மனிதன் மறந்ததேனோ
தனது உதிர்ந்துபோன உணர்வுகளை???

தனது பிம்பம் மறந்து
தினமும் போகிறான் பறந்து,
பணம் மட்டும் வாழ்வென்று !!!!
--வேங்கை

எழுதியவர் : வேங்கை (11-Apr-13, 9:46 pm)
சேர்த்தது : thanimai
பார்வை : 283

மேலே