மதம் தவிர்ப்போம்

மதம் மனிதனுக்கு சாபம்,
"வரம்" என பிடித்தவர் இல்லை ,
"சாபமாய்" மறுத்தவர் வாழ்கிறார் !

மதவாதம் ஒரு சிறு தீ ,
பற்றியவரை தொற்றிக்கொள்ளும் பேய் ,
அணுகுண்டும் மதவாதமும் ,
இணைஎன சொன்னால் மறுப்பதற்கில்லை!

மதம் மனிதனை துண்டாடும் மாய பிம்பம் ,
மனித வாதம் இருக்கலாம் மதவாதம் எதற்கு !

எங்கும் சமமாய் பெய்யும் மழை ,
எல்லோரையும் இணைக்கும் மூச்சுகாற்று,
வாழ்ந்தபின் மடியும் பூமி ,
எல்லாம் இங்கு பொது !

ஒரே நாடு ,
ஒரே மக்கள் ,
ஒரே இனம் ,
ஒரே எண்ணம் கொள்வோம் !

மனிதநேயத்தை போதிக்கவே ,
மதங்களின் போதனை ,
மரணத்திற்காக அல்ல !

வாதங்கள் தோன்றும் ,
விவாதங்களை தவிர்த்து ,
அவரவர் விருப்பத்தில் ,
அமையட்டும் பிரார்த்தனை !

உன்னைப்போலவே ஒவ்வொருவரையும் பார்க்கும்
உணர்வுகளை உள்ளத்தில் நிரப்பி,
மனதளவில் கூட பிரிவுகள் மறுப்போம் !

உயிர்களை தின்று ,
உணர்வுகளை கொள்ளும் ,
மதங்களை எரித்து சாம்பல் செய் !

இனி சமாதானமே பிரதானமாக இருக்கட்டும் ,
வன்முறையை தவிர்த்து,
ரத்தங்களுக்கு பதிலாக ,
பூக்களால் அற்சிப்போம் இந்த பூமியை !

வேற்றுமை படுத்தும் ,
எண்ணங்களை மாற்றி ,
தோழமை உணர்வோடு பழகு !
அன்பை போற்றி வம்பை தவிர்ப்போம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Apr-13, 9:41 pm)
பார்வை : 99

மேலே