பயணம் தொடருதே...
வழியனுப்பவும்
வரவேற்கவும்
துணைபேசவும்
ஆளில்லாத
இலக்கில்லாத பயணங்கள்
காடு மலை நிலம்
குகை கோயில்கள்
பரந்து விரிந்த படைப்பில்
தனிமை தேடி
பயணிக்கும் மனது
நடந்தவை அனைத்தும்
அனுபவம் எனப்பெற
வருபவை பற்றிய
வருத்தம் பறந்ததே.
எய்தவனை தேடி
திரும்பிய அம்பாய்
எனை படைத்தவன்
நோக்கிய பயணம் தொடருதே...