இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!

நான் கருவிலிருந்த
வேளையிலே எனை
சுமந்த என்அன்னை
தன் அடிவயிற்றை(என்னை)
தன்னைத்தானே தடவித்தடவி
கொஞ்சிப்பேசிய மொழி!

என் தந்தை
எனை கண்டிடாத
முன்பாகவே என்
தாயின் தொப்புளில்
தன் இதழ்பதித்து
என்னோடு பேசிய
அன்பு மொழி !

அழுதபடி நான்
பிறக்க தாளாத
வலி முனகல்களிலும்
எனை வாரி
மாரோடு அனைத்து
முத்தமிட்ட அன்னையின்
பாச மொழி!

என்னை தாலாட்டி
சீராட்டி வளர்த்த
செம் மொழி!

ஆசான் அதட்டலாய்
பேசி பேசி
எனை செதுக்கி
சீர் படுத்திய
எனது அருமை
நேச மொழி!

நான் சிரிக்க,
அழ,சிந்திக்க,
முயற்சிக்க,நட்புப்பாராட்ட,
ஆலோசிக்க,முடிவெடுக்க,
காதல் கொள்ள,
கோபம் கொள்ள,
கொஞ்சி குலாவ,
என்னுள் நானே
பேசிக்கொள்ள என
எல்லாவற்றுக்கும் பயன்
படுத்தும் எனதருமை
தமிழ் மொழி !

எண்ணமெல்லாம் வண்ணம்
தூரி வசந்தத்தை
ஏற்படுத்தும் எனது
இனிய தமிழ்மொழி!

மூச்சி திணறி
இறக்கும் வேளையிலும்,
இறக்கம் வேண்டி
இறைவனிடம் மன்றாடவும்,
நான் பேசும்
எனது உயிர்
தமிழ் மொழி !

வேழம் போல்
இன்னல்கள் தமிழுக்கும்
தமிழ் மக்களுக்கும்
இருப்பினும்,வேங்கையென
மனத்துணிவு கொண்டு
வென்று வாகைச்சூடவும்!

உடுக்கை இழந்ததை,
ஊருக்கே உடுக்கை
அடித்து சொல்ல
நினைப்பவனின்,உடுக்கை
பிடித்து கன்னம்
பழுக்க அறையும்
கையென,நட்பு
கொண்டு ஒன்றுபட்டு
தமிழையும் தமிழ்
மக்களையும் காப்போம்
என உறுதி கொண்டும்!

தரித்திரம் துரத்தி
சரித்திரம் படைத்து
சுதந்திர சுவாசத்தோடு
வாழ்வாங்கு வாழ்வோம்!

தோழர்கள் அனைவருக்கும்
இதயம் கனிந்த
இனிய தமிழ் புத்தாண்டு
தின நல் வாழ்த்துக்கள்!

வளர்க நமது தாய்மொழி!
வாழ்க நமது மக்கள்!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (13-Apr-13, 3:34 am)
பார்வை : 326

மேலே