என்ணெய் காணா பெண்களின் தலைகள்..!!! ...

உங்களின் ,
அந்தப் பார்வை
காந்தப் போர்வை-ஒரு
காதல் மிதவை -காம
தந்தப் பேழை..!

உங்களின் ,,
சிரிப்பு வெடிக்கரும்பு
இமைகள் கொடி அரும்பு
நட்பு இன்ப வாழ்வு
அதுதான் அன்பு உறவு..!

உங்களின் ,,
உரை மழையின் குளிர்ச்சி
உணர்வு தமிழின் நெகிழ்ச்சி
நடை அழகின் சுழிப்பு
வரிகள் விழியின் மொழி..!

உங்களின் ,
புன்சிரிப்பு புதுமுத்து பேரொளி
சிந்தனை மதுமத்து சுவைத்துளி
ஸ்பரிசம் நுங்கின் குளிர் குழைவு
அணைப்பு வெண்சங்கின் வளைவு...!

.......இப்படியெல்லாம் எழுதிக் குவிக்க
இங்கு உள்ள விரல்கள்
எப்போது எழுத இருக்கின்றன
விலை நிலங்களைத் தொலைத்து
உலைக்குள் தத்தம் வாழ்வை கொதியாக்கும்
உழைப்பாளிகளை..??

கலப்பை கடாட்சம் பெறா
கரிசல் மண்ணில்
காஷ்மீரத்து பூக்கள் பூப்பது எப்போது....?

காத்திருக்கின்றன
கம்மாய் கரையில்
என்ணெய் காணா பெண்களின் தலைகள்..!!!

எழுதியவர் : பாலா2 (13-Apr-13, 11:25 pm)
பார்வை : 121

மேலே