உங்கள் கவிதைகள்...?
போன்சாய் சாடிகளில் ,
நிறம் மயக்கும் பூக்கள்
பசுமை தோற்கும் செடிகள்
மகசூல் வியக்கும் கனிகள்
கையளவு விரலளவு மரங்கள்
.......எல்லாம் தாராளம் ,ஏராளம்...
வேர்களின் சுதந்திரம் எங்கே...??
உங்கள் கவிதைகளில்
வசீகரிக்கும் வரிகள்
சொக்கவைக்கும் சொற்கள்
சிங்கார சீர்கள்
வாயடைக்கும் வடிவங்கள்
.......எல்லாம் தாராளம் ,ஏராளம்...
கவிதையில் மானுட வாழ்வு எங்கே...??