சடங்கு செய்யுங்கள்..

உங்கள் மகளுக்கு செய்தீர்கள்
பூச்சூட்டு சடங்கு

பிஞ்சு வைக்கும் காலம் வந்தது
உங்கள் வீட்டு கொன்றை மரத்திற்கு

ஆனால் மறந்துப் போனது
பூச்சூட்டு சடங்கு செய்ய

தரை முழுதும்
கொட்டிக் கிடக்கின்றன
கொன்றை பூவிதழ்கள்...

எழுதியவர் : தாமரை (14-Apr-13, 11:38 am)
பார்வை : 82

மேலே