தமிழன்டா

அழுது அழுது கண்ணீர் வற்றியது,
துளைத்து துளைத்து இரத்தமும் வற்றியது,
இனி அழுதும் பயனில்லை,
உயிர் வாழவும் வழியில்லை!!

தவறுகள் செய்திடவில்லை,
கீழ்நிலையாய் வாழ்ந்திடவில்லை,
ஆயினும் பூலோகமே சேர்ந்தெம்மை
அழிக்கிறது,
புதைக்கிறது.

ஏன் தெறியுமா???????
உன்பிள்ளையாய், உன் கையை பிடித்து,
கொஞ்சி விளையாடி, தீம்பால் பருகி,
எவருக்கும் கிட்டாதவெல்லாம் உன்னால்
எமக்குக்கிட்டியதால்.

எம்மை அழிப்பதாய், உன்னை அழிக்க நினைக்கிறான்!

நாங்கள் மாறமாட்டோம் , ஓயமாட்டோம்!!!

"வாழ்ந்தாய் பல்லாயிரம்,
வாழ்வாய் பலகோடி"!!!

-இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : குட்டிமணி செங்குட்டுவன் (14-Apr-13, 12:24 pm)
சேர்த்தது : kuttimsenguttuvan
பார்வை : 322

மேலே