அம்மா ஆசை......

பார்க்க முடியாத தொலைவில்
அவள் இல்லை
பக்கத்து தெருவில்தான் இருக்கிறாள்.
என் வாழ்கையில்
ஒளி தந்த வெண்ணிலவே
உன் சந்திரதரிசனம் எப்போது?
உன்னை மேகம் மறைத்ததால்
என்னுள் எனோ!...........
சொல்லமுடியாத சோகம்.
மாததிற்கு ஒருமுறைதான்
வான்நிலவுக்கு அமாவாசை
என் கண்மனியே
உன்னை காணாத
ஒவ்வொருநாளும்
எனக்கு அமாவாசை
வானையும்,
நிலவையும்
பிரிப்பது
அமாவாசை
உன்னையும்,
என்னையும்
பிரிப்பது
உன்அம்மாவின் ஆசையா?

எழுதியவர் : சுட்டி அரவிந்த் (14-Apr-13, 6:48 pm)
பார்வை : 133

மேலே