அன்னை மண்ணே
அன்னை மண்ணே போய்
வருகிறோம்
உன்னை விட்டு அகதிகளாக
போய் வருகிறோம்
உடமைகளை இழந்து
உருப்படிகளாக
போய் வருகிறோம்
உரிமைகளை இழந்து
உயுரற்று
போய் வருகிறோம்
வாழ்க்கை இழந்து
வாழ வழித் தேடி
போய் வருகிறோம்
வேட்கை இழந்து
வெறும் கையோடு
போய் வருகிறோம்
என் அன்னை மண்ணே
கவலை கொள்ளாதே
எங்கள் இரத்தத்தினை
கரைகளாக பதியவிட்டுத்தான்
சென்றிருக்கிறோம்
நம் சொந்தங்களை
விதைகளாக விதைத்துவிட்டுதான்
சென்றிருக்கிறோம்
என் அன்னை மண்ணே
மீண்டு வருவோம்
வீரியமாக
உன்னை மீட்டெடுத்து
செல்ல
காத்திரு ....