தமிழக அரசும், மின் வெட்டும்!

தமிழர்களின் இனத்தை
பெருக்க,போர்க்கால
அடிப்படையில் தமிழக
அரசு நடவடிக்கை
முன் அறிவிப்பு
இல்லாத இரவு
நேர மின்வெட்டு!
****************************************************************************
கல் தோன்றா,
மண் தோன்றா,
முன் தோன்றிய
தமிழர்களுக்கு,பழமையை
பற்றி நினைவு
கூர அரசு
நடத்தும் இலவச
கண் காட்சி
மின்வெட்டு!
****************************************************************************
முள்ளை முள்ளால்தான்
எடுக்க முடியும்,
என்பதை போல்
திருடர்களை இருளில்
பிடிக்க அரசு
நடத்தும் இலவச
பயிற்சி வகுப்புகள்
மின்வெட்டு!
****************************************************************************
செயற்கையில் மூழ்கிய
தமிழனுக்கு இயற்கையை
பற்றிய இலவச
விழிப்புணர்வு வகுப்புகள்
அதுவும் வீட்டில்
இருந்தபடியே கற்க
தமிழக அரசு
மேற்கொண்ட நடவடிக்கை
மின்வெட்டு!

நிலவொளியின் அருமையும்
தென்றலின் மகிமையையும்
அனுபவித்தபடி அரசை
பற்றி அவதூரு
பேசியபடி எதிர்
கட்சிகள்!

இதை எல்லாம்
அறியாமலும் அரசின்
புகழை மூடி
மறைத்தும் யார்
என்ன சூழ்ச்சி
செய்தாலும் அரசு
தன் கடமையை
கண் என செய்யும்!
****************************************************************************
ஹா ஹா ஹா மின்வெட்டை பற்றி எழுத வைத்த எனது ஆருயிர் தோழர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி,

தோழர்களே இக்கவிதைகளை பாராட்ட (அல்லது)சாட வேண்டுமாயின் தோழர் கார்த்திக்
அவர்களை அணுகவும்
ஹா ஹா ஹா

அணுக வேண்டிய முகவரி

பெயர்:உயர்.திரு.கார்த்திக்,
இடம்:நவீன் பயல் இதயம்,
தேசம்:எழுத்து தளம்
த.பெ.:கருத்து பகுதி.

ஹா ஹா ஹா

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (15-Apr-13, 5:46 pm)
பார்வை : 124

மேலே