காதலாகி.......
விழியாலே கவர்ந்து என்னை
நினைவினிலே மயக்கியவளே!
கனவினையே நிஜமாக்க
கரமிரண்டைப் பிடித்தவளே!
வாஞ்சை உந்தன் மீதினிலே
வளைத்து என்னை நெகிழ்ந்தவளே!
நளினம் கொண்ட நடையினிலே
நாணம் கொள்ள வைத்தவளே!
பருவ மகள் அழகினிலே
பேச வைக்கும் கலைமகளே!
கதியென்று நம்பியவள்
களமதிலே இறக்கிவிட்டாள்!
கொஞ்சி மகிழ சீண்டிவிட்டால்...
மோக மழை பொழிந்துவிட்டாள்!
கவி எழிலில் நனைந்துவிட
காதலாகி...... உயிர்பித்தாள்......
எழுதுகோலால்.......

