ஈந தலைகள்
தீராத மழைத்துளிகளில் காகித
ஓடமாய் நனைந்து கீற்றின்
அசைதலின் நிழலை கண்டு
சிங்கம் அச்சத்தின் உச்சியில்
புலிகளின் பாதங்களில் இடறிய
சருககளின் ஓசையை கேட்டு
பின் சலனமற்ற கர்ஜனையுடன் .....
குகையின் வாசலில் தலை மட்டும் தெரிய
அங்கும் இங்கும் உருண்ட கண்கள் உடன்
உறுதி கொண்டு பின் நான் தலை என்று
உணர்த்தி ஊருக்குள் வாழும் ஈந தலைகள்
என்று விழும் மண்ணில்.................

