மனம் திறக்கிறேன் (நிழற் குடைகள் - அறிமுகங்கள் அனுபவங்கள்)

மனம் திறக்கிறேன் (நிழற் குடைகள் - அறிமுகங்கள் அனுபவங்கள்)
டிசம்பர் 20 2012
அன்றைக்கும் வழக்கம் போல நாலு மணியளவில் அலுவலகம் செல்ல தயாராகி கார் ஐ ஸ்டார்ட் செய்துவிட்டு மாணிக்கம் சார் வருவார் என்று காத்திருந்தேன் 10 நிமிடங்கள் வரை வரவில்லை, அட என்ன ஆயிற்று சொன்ன சமயத்துக்கு வந்திடுவாரே என்று எண்ணியவன் அவருடிய கைப்பேசிக்கு இணைப்பூடினேன் இரண்டு மூன்று தடவை கைப்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது மறுமுனை எடுக்கப்படவில்லை
நானும் ஏதோ அசதியில் இருப்பாரென்று நினைத்துவிட்டு வழக்கம் பல அலுவலகம் சென்றுவிட்டேன்.
29 ஆம் வயதில் துணை மேலாளர் பதவியிலிருந்து மேலாளராக பொறுப்பேற்ற முதல் நாள் பணியிட மாற்றம் கொண்டு தற்போது நான் இருக்கும் இடத்திற்கு வந்த வருடம் 2011 மார்ச் வரவேற்பு அளித்தவர்களில் முதலில் அறிமுகமானவர் மாணிக்கம் சார்
மாணிக்கம் சார் உதவி மேலாளர் நான் இந்த யூனிட்டிற்கு மேலாளராய் வந்ததிலிருந்து எனக்கொரு நல்ல தகப்பனாக ஆசானாக இங்குள்ளவர்கள் அனைவரும் மதிக்கும் படியான எடுத்துக்காட்டு மனிதராக வழிக்காட்டியாக இருப்பவர்.
சில நாட்களாகவே காண்ட்ராக்டர் ஆர்பிடரேஷன் ரௌண்ட் ஜார் மீட்டிங் இல் பங்கெடுப்பதில்லை காரணம் அவரின் உடல்நிலை ,, சிறிய கோபதாபங்களும் அவருக்கு பெரும் பாதிப்பை தலை கிறக்கத்தை கொடுத்துவிடும் உபாதை
நானே எல்லா பணிகளையும் நோக்கிக்கொண்டும் அவருடைய ஆலோசனைகளை அவ்வப்பொழுது கேட்டும் நல்ல விதமாக தேறியவன் என்று கூட சொல்லலாம்
என்நிலைக்கண்ட சிலரின் வஞ்சகப் பேச்சுக்களுக்கும் பொறாமை எரிச்சல்களுக்கும் என்னுடைய கணிப்புகளுக்கும் தீர்மானங்களுக்கும் உடன் படியாத கைக் கோர்க்காத சக இள நிலை பதவியிலிருக்கும் மதிக்கத் தக்க வயதில் இருப்பவர்களின் முதுகைக் குத்தும் குள்ளநரி செயல்களை முறியடித்து பணிகளை நேர் வழியில் எளிய புதிய முறையில் கொண்டு செல்ல மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
என் தந்தை இல்லாத குறையை நான் இவரை அலுவலக நேரங்கள் போக மற்ற நேரங்களில் அப்பா என்று அழைப்பதே வழக்கம.
வாக்கிங் போவதிலிருந்து ஜிம் நீச்சல் சாயங்கால ஜாகிங் எல்லாரோடும் சந்தோஷமாக பேசுவதிலும் அலுவலக சம்பந்தப்பட்ட விழாக்களை சிறப்பிப்பதிலும் பெண்களிடம் கள்ளம் கபடம் இல்லாமல் கிண்டல் கேலிகள் செய்வதிலும் தன்னை ஒரு யூத் ஆகவே பாவித்து செயல்படுவதில் ஆர்வமுள்ளவர் . ஒருநாளும் கேசத்திற்கு கறுப்பு வண்ண மை தடவியதில்லை
,,என்னை எப்பொழுதுமே கேலியாக பார்த்து சிரிப்பார் எனக்காக நியமிக்கப்பட்ட செகரெட்டரி பெண்ணிடம் நான் வேலை குறித்து பேசும் தருணங்களிலும் அவள் முன்னேயே என்னை கிண்டலாக பேசுவார் "என்னவோய் எங்களுக்கெல்லாம் செக்கரெட்டரி போடக் கூடாதுன்னு சொன்னீராம் உம்ம செக்கரெட்டரியையும் எங்களுக்காக வேலை செய்ய கூடாதுன்னு சொன்னீராம் ஏன்வோய் இப்படி ஒரு சகுனித்தனம் வோய் " என்று
சமையல் செய்யும் நேரங்களிலும் வைன் பாட்டில் ஐ கொண்டு வந்து எனது குடியிருப்பில் தொலைக்காட்சியில் பழைய பாடல்களை போட்டவராய் இரசிப்பதோடு மட்டுமல்லாமல் சமையலிலும் பலவிதமான பண்டங்களை சொல்லிக்கொடுப்பதிலும் கைத்தேர்ந்தவராக இருந்தார்
என்னை திருமணம் செய்யக்கோரி வற்புறுத்தமாட்டார். வீட்டிலிருந்து அழைப்பு வந்தாலும் மனைவியிடம் குசுருதிகளை தொடர்ந்தவராய் அவர் பிள்ளைகளின் செயல்களை கண்டித்து என்னை ஒரு உதாரணமாக எடுத்து கூறுவதிலும் கவனம் குறைந்ததில்லை,,,,
அவரின் ஆர்வங்களை கண்டு பூரிப்படந்துதான் என் உடல் உறுப்புகளையும் தானம் செய்ய விழைந்து செய்தேன் என்றும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஆம் ஒரு முன்மாதிரி தான் அவர் ,,, ஒரு இளைஞனுக்கு இளைஞனாய் ,, அவர் குடும்பத்திற்கு நல்லதொரு தலைவனாய் சக ஊழியர்கள் மத்தியில் அன்பு மனிதனாய் ,,, பணியில் கடமையுணர்ந்தவராய் இருப்பதில் ஒரு போதும் தவறியதில்லை
என் தந்தை இறந்த சமயத்தில் எனக்கு அறிமுகமாகி இருந்த இவரை என் தந்தைதான் எனக்கு துணையாக இருக்க அனுப்பி வைத்திருக்கிராற்போல் என்று பலமுறை கண்ணீர்மல்க சிந்தித்திருக்கிறேன் ,,அவருக்கான என் டைரியின் சில பக்கங்களையும் ஒதுக்க தவறியதில்லை,,,, நான்
டிசம்பர் 19 2012
மாலைநேர ஜாகிங் போகும் பொழுதே உடலை உதறியவராய் சோர்ந்துதான் காணப்பட்டார் முகமும் ஏனோ அன்று கருத்தே காணப்பட்டது ஆனால் புன்னகை மட்டும் வெகுவாக குறையாமல் பூத்திருந்தது என் கைகளை பிடித்த படியே அன்று ஜாகிங் ஐ ஒரு மனதாக முடித்தார்,,,
அன்று அவரது குடியிருப்புக்கு சென்றவர் வழக்கமாக குளித்து தயாராகி எனது வீட்டினை தேடி எப்பொழுதும் வருபவர் அன்று வரவில்லை எனக்கும் தோன்றியும் ஏனோ கேட்கவில்லை ,, கொஞ்சம் உளைச்சலில் படுத்திருப்பார் என்று நினைத்தவன் விட்டுவிட்டேன்,,,, ஆனால் அன்றுதான் அவரை கடைசியாக பார்க்கப்போகிறேன் என்பது எனக்கு தெரியாமலே போனது
டிசம்பர் 20 2012
காலையில் வழக்கம் போல அலுவலகம் சென்றுவிட்டேன் அவர் அலுவலக பணியாளர்களின் பேருந்தில் அலுவலகம் வந்துவிடுவார் என்று கருதியவனாய் ,,ஆனால் என்றும் மதிய உணவு வேளையில் என்னுடனேயே எனது காரில் வருவதும் பின்பு நான்கு மணியானதும் என்னுடனேயே மீண்டும் அலுவலகம் வருவதும் அவருக்கு வழக்கமான ஒன்று
அலுவலகம் சென்று எனது அறைக்கு போனவன் ஒரு அரைமணி நேரம் கழித்து எனது செகரெட்டரியிடம் மாணிக்கம் சார் ஐ வரசொல்ல கூறிய பொழுது அவர் அலுவலகம் வராதது தெரிய வரவே ,,அவர் கைப்பேசிக்கு அழைத்தேன் எடுத்து பேசினார் ,,கொஞ்சம் உடம்பு வலியாக இருக்கிறது ,,உணவு இடைவேளை கழித்து என்னோடு சேர்ந்து அலுவலகம் வருவதாக கூறி இணைப்பை துண்டித்தார்,,,
வழக்கம் போல நாலு மணியளவில் அலுவலகம் செல்ல தயாராகி கார் ஐ ஸ்டார்ட் செய்துவிட்டு மாணிக்கம் சார் வருவார் என்று காத்திருந்தேன் 10 நிமிடங்கள் வரை வரவில்லை, அட என்ன ஆயிற்று சமயத்துக்கு வந்திடுவாரே என்று எண்ணியவன் அவருடிய கைப்பேசிக்கு இணைப்பூடினேன் இரண்டு மூன்று தடவை கைப்பேசி ஒலித்துக் கொண்டே இருந்தது மறுமுனை எடுக்கப்படவில்லை
நானும் ஏதோ அசதியில் இருப்பாரென்று நினைத்துவிட்டு வழக்கம் பல அலுவலகம் சென்றுவிட்டேன்.
இரவு 8 மணி ஆகியும் அவரை காணவில்லை கைப்பேசியும் கனைத்துக்கொண்டே இருக்கிறது என் சிறு மனத்தாங்கலை உணர்ந்தவன், நானே நேரில் சென்று கதவை தட்டி ஓய்ந்து அங்கும் இங்கும் தேடி கிடைக்காமல் பின்பு ஏனைய நிர்வாக அலுவலர்களை அழைத்து கதவுடைத்து பார்த்தபொழுதுதான் விஷயம் தெரிந்தது
அன்று அவர் பெரலைஸ் அட்டாக் இல் நிறைய நேரம் குளியலறையில் விழுந்து கிடந்து அதிக நேரமாகியும்யாரும் பார்க்காமல் பரிதாப நிலையில் இருந்ததை
உடனே ஆம்புலன்ஸ் ஐ வரவழைத்து நானும் அலுவலக பணிகளுக்கு தற்காலிக விடுமுறை விண்ணபித்தவனாய் நான்கு நாட்கள் அவருடனேயே இருந்து அவர் மனைவிக்கு நிலமைகளை விளக்கி அவருடைய இன்சியூரன்ஸ் காரியங்களை சரி செய்தவனாய் அவரையும் கவனித்தவனாய் பார்த்தும் பலனில்லாமல் என்னையும் அவர் குடும்பத்தையும் அவர் உயிராய் மதித்த அலுவலக பணிகளையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து விண்ணுலகம் சென்றார்.
உறவுகளே
வரும் பொழுது நடந்து சிரித்து எதையோ சாதித்து குடும்பத்தை நிலை நிறுத்தவேண்டும் பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டும் மனைவியின் புன்னகையை காதால் அலைப்பேசியில் கேட்டு பூரிப்படைய வேண்டும் அவர்களின் சந்தோஷங்களை விட என் சந்தோசம் என்ன பெரிது என்று
சொன்ன மனிதர் பிணமாக கட்டி விமான பிணக்கிடங்கில் அவர் உடலிருக்க நானும் என் நண்பர்களும் உடன் போன நிலையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை,,
ஒவ்வொரு இடைக்கால இடைவெளி விடுமுறைகளையும் ஒன்றாய் விமானத்தில் சென்று வந்தவர்கள் நாங்கள் விமான பயணத்தில் மது அருந்துவதை மிகையாக நேசிப்பவர்
நான் என்னங்க சார் இப்படி கொஞ்சம் பார்த்து என்று சொன்னாலும் ,அதான் நீ இருக்கியே பா என்னை எங்க வீட்டுக்கு கொண்டு போயி சேர்த்துட மாட்டியா" என்னும் அந்த எதார்த்த குரல்,,,
அன்று அவரின் உயிரற்ற உடலோடு அவரின் உடமைகளையும் ,,அடக்கிவிட முடியா என் எண்ண கொந்தளிப்புகளிலும் வற்றாத கண்ணீர் நதியையும் ,,,நெஞ்சோடு நினைவு பாரங்களை தைத்துக் கொண்டிருக்கும் ஆயுளுக்கும் மறந்து விட முடியாத அறுக்கும் அக வலிகளையும் ஏந்திவனாய் பிணத்தை கண்ணீருடன் வரவேற்க காத்திருக்கும் அவருடைய குடும்பத்திற்கு என்ன ஆறுதல் கூறப்போகிறேனோ என்ற களேபரங்களுடன் நான் கண்பட சந்தித்த எத்தனையோ மரண அனுபவங்களில் என் மனம் அதிகமாக பாதிக்கப்பட்ட முக்கிய மூன்று மரண அனுபவங்கள்
முதல் அனுபவம் எனக்காக நிச்சயம் செய்தப் பெண் ,,இரண்டாவது அனுபவம் என் தந்தையின் இயற்கை மரணம் மூன்றாவது அனுபவம் மாணிக்கம் சாருடைய இந்த மரண சம்பவம்…..
பந்தயக்கடலில் பக்குவத்தை
நிலையாக்கி கற்றுவிட நீந்தினேன்
நின்றாலும் உயிர் மரணத்தின் முன்பு
மண்டியிட்டு விடக்கூடாதென விரைகிறேன்
இருக்கின்ற கடைசித்துளி வரை,,,
மரணம் என்னை சந்திக்கும் முன்பே
அதைநான் ஒரு கை பார்த்து விட எண்ணிதான்
நீச்சல் கற்றுத்தந்த அனைவரும்
நிழற் குடையாக பின்னால்
தொடர்வதாய் எண்ணி
நம்பிக்கை ச் சுமைகளோடு பயணிக்கிறேன்
இனிவரப்போகும்
வருங்கால தொடர்வலிகளை
அனுபவ உரங்களாக
மனதோடு தூவிக்கொள்கிறவனாய்
அனுசரன்