ஓ மனமே,,,ஓ மனமே,,,(ஹுஜ்ஜா)
போட்டு வைத்த சாலையிலே
----போக கால்கள் மறுக்குது
புதுப்பாதை தனை தேடி
----பொழுது வீணா கழியுது.
நட்ட செடி தண்ணீர் ஊற்ற
----நாதி இன்றி காயிது
தோட்டம் வச்சு பூப்பறிக்க
----ஆசை மட்டும் இருக்குது
செய்ய வேண்டிய செயலெல்லாம்
----சேர்ந்து நிறைய கிடக்குது
போய் சேராத ஊருக்கு
-----வழி தேடி போகுது
இருக்கின்ற பொக்கிசத்தை
-----இழிவாக நினைக்குது
இக்கரைக்கு அக்கரை
-----பச்சையாக தெரியுது
நற்செயலில் நன்மைகள்
---பற்பல இருக்குது
நயமாக சொன்னாலும்
----பலமாக எதிர்க்குது
தீய செயல் தீமையென்று
----தெரிந்த பின்னும் விரும்புது
மாய வலை ஆசையிலே
----மனம் ஏனோ மயங்குது