வெற்றியின் மூலதனம்!!!

பல நிறைதனில் சில குறையுமுண்டு
பல குறைதனில் சில நிறையுமண்டு
சில குறையால் பல தோல்வி
சில நிறையால் பல வெற்றி யேன்?

சிந்தித்து ஆராய்வின் அறிவாய் உண்மை
எந்நேரமும் பயந்து ஒதுங்கி ஓடாதே
வந்தனை செய்தே வாழ்வை ஓட்டாதே
சிந்தனை சிறகு விரித்து தூங்காதே!!!

அசுத்த அசதி பாய் விரித்து
சோம்பல் மூலையில் சுருண்டு கிடப்பின்
தாமத போர்வை தாவிவந்து மூடிகொள்ள
நேரந்தவறா நேர்மை வெளி யோடுமே!!!

மறதியை கைது செய்து தூக்கிலிட்டு
தூக்க துக்க அழுகை அழுகாதே
எண்ணமும் செயலும் ஒன்றாக்கி
விருப்ப விதையிட மனதை உழுவாயோ!!!


விரைந்து நடப்பின் விவரம் புரியும்
நிறையும் வெற்றும் யென்றூ ததும்பாதென்று
கர்வம் கொண்டறிவு மழுங்கிய முனை
அஃது வெற்றியடிக்கு யென்றும் கீழே!!!

வெளுத்த துணியு; அலுத்த மனமும்
விலை போகா; அஃது சபையேறா
குறைப்பின் நாணம் உயரும் வாழ்வு
மிகின் நாணம் அழியும் கனவு!!!

முயற்சி நுனியை மட்டுமே தொட
பயிற்சி சிந்தும் வியர்வையால் பயணம் தொடர
மனோதிடம் மேலும் வேகம் கூட்ட
விடாமுயற்சி வியர்வையே வெற்றியின் மூலதனம்!!!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (17-Apr-13, 9:32 am)
சேர்த்தது : siva71
பார்வை : 166

மேலே