என்றும் உன் நினைவில்....

உலர்ந்த சருகானேன்
உதிந்து விழுந்து
துவண்ட மலரானேன்
விழியோரத்தில் தீபமாகி
அதரத்தின் அசைவில்
அழகிய அந்திமாலை பொழுதாகி
விரிந்த இதயத்தின் கனவுகளை
அந்தரங்கத்தில் அஸ்தமனமாக்கிச்
சென்று விட்டாய் அடுத்தவளை விரும்பி
நிழலாக நெஞ்சோடுவரும் நினைவுகளுடனும்
கலையாத கவின் மாலைப் பொழுதுகளின்
கடந்த கால கற்பனைகளுடனும்
முடியாத உறக்கமற்ற இரவுகளில்
கண்ணீர் சிந்தும் கவிதை வரிகளாய்
என்றும் உன் நினைவில்....

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-13, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : endrum un ninaivil
பார்வை : 95

மேலே