தமிழன்
தமிழா! உன் காலுக்கு கீழ் பதுங்கியுள்ளதடா பூமி
நீ மேல் நோக்க வேண்டாம் வானை
அது கீழ் இறங்கி வரும் உனக்கு நேரே
உன் பார்வையில் உள்ளதடா நெருப்பும்
உன் சுவாசத்தில் உள்ளதடா அனலும்
உன் சுண்டுவிரலில் சாயுமடா தடைகள்
உன் தோளில் உள்ளதடா வீரம்
பெரும் புயலுக்கு ஒப்பானதடா உனது கோபம்
பெரும்படையும் சிதறுமடா அதைக் கண்டு
இந்த வையகத்தில் நமக்கு நிகர் நாமே
இந்த உலகத்தின் மூத்த குடியே