உழவனின் விழுதுகள்
பசுமை போர்த்த பூமியோ
பாழும் நிலமாய் போனது !
காய்ந்து வெடித்த நிலமோ
கண்ணீர் விட்டு அழுகிறது !
உழுது பயிரிட்ட உயிர்களோ
அழுது விடுகிறது உயிர்களை !
உழவர் குடும்பங்கள் வாடுது
உலகில் வாழவழியை தேடுது !
உழவனின் விழுதுகள் நிலத்தில்
உய்த்திட வழிதேடி ஆலோசனை !
இயற்கை செய்திட்ட கொடுமை
இன்னுயிர் மறையுமோ எத்தனை !
நம்பிடுவோம் நாமும் மழையை
கொட்டிடும் குறைகள் நீங்கிடவே !
திட்டங்கள் வகுத்திடுக இனியேனும்
வறட்சி நேரத்திலும் வாழ்ந்திடவே !
பழனி குமார்

