மறக்க முடியுமா??
படம் பார்த்து
கதை சொல்லும்
தரம் ஒன்றில் இருந்து
தரம் பார்த்து விதம் காட்டும்
விடியல் ஒன்றே கல்வி கூடம் ,,,
பேனா பிடித்து
அ எழுத வைத்த
ஆசானும் அங்கே
தேன் கொட்டும்
வார்த்தைகளால்
தேடல்கள் காட்டும்
தெய்வங்களும் அங்கே
ஆடலும் பாடலும்
அள்ளி வீசிய
அருமைகள் அங்கே
ஔவையின்
ஆத்திசூடியை
பாத்தி போட்டு
எங்களுள் பயிரிட்டு
தண்ணீர் பாச்சியே
ஆசான்களின் அறிவுரையை
மறக்க முடியுமா???
கூட்டலுக்கு சக என்றும்
கழித்தலுக்கு சய என்றும்
பெருக்கலுக்கு தர என்று
வகுத்தலுக்கு பிரி என்று
என்னுள் வரி வைத்ததை
மறக்க முடியுமா???
நண்பர்கள் கூட்டம்
நான்கு பக்கமும்
நாடுவில் நான் இருக்க
நாள் போனதை மறக்க முடியுமா??
திசைதப்பும் போது
திசை காட்டும்
நண்பர் கூட்டம் அங்கேயே ,,,,,,
பரீட்சைகள் முடித்து
திறமைகள் தேர்ந்து
திறந்து விட்டது போல
நுழைகின்றோம்
பல்கலை கழகம் ,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }