மணவறை முதல் கல்லறை வரை

கொஞ்சம் கற்பனைகளோடும்
மிஞ்சும் ஒப்பனைகளோடும்
மிகையான கனவுகளோடும்
வகையான உணவுகளோடும்
அலங்கரிக்கும் தோரணங்களோடும்
அங்கம் கொழிக்கும் ஆபரணங்களோடும்
பழக்கமான நண்பர்கள் பின்னிற்க
வழக்கமான சொந்தங்கள் முன்னிற்க
திருமணம் எனும் பெயரில் இருமனம் இணைத்து
தீராத ஆசைகளை திகட்ட தீர்த்து
சில மதங்களில் கருவுற்று
சீமந்தம் செய்து சிறப்புற்று
பத்து மாதங்களாய் கருவாய் சேமித்து
பத்து நிமிடங்களில் உருவாய் பிரசவித்து
அவள் அம்மா ஆவதுடன் அவள் தலைவனையும் அப்பவாக்குகிறாள்
அன்றிலிருந்து அவனுள் பொதுநலம் விலகி
என் குடும்பம் எனும் சுயநலம் பழகி
பகலில் அலுவலகத்தில் உழைத்தும்
பின்னிரவில் அவளுடன் கட்டிலில் திளைத்தும்
காலத்தை கழிக்கின்றான்
காமத்திலும் களிக்கின்றான்
அலுவலக உழைப்பு அது காலத்தின் கட்டாயம்
அவளுடன் களிப்பு அது காமத்தின் கட்டாயம்
இங்ஙனம் சுழன்று கொண்டிருக்கும் அவனது வாழ்க்கையில் இன்பம் நீங்கி விடுகிறது
துன்பம் தேங்கி விடுகிறது
பணப் பித்து பிடித்து
தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்து
இறுதியில் தன் குடும்பத்தின் மீதான அக்கறையில் உழைத்தவன்
குருதியில் கலந்தது சக்கரை நோய்
பல மாதங்களாய் செயற்கை மருந்துகள் உட்கொண்டவன் -அடுத்த
சில மாதங்களில் இயற்கை எய்தினான்
அன்று கருவானான் பெண்ணுக்கு கருவறையில்
இன்று எருவானான் மண்ணுக்கு கல்லறையில்.