இறைவன் துறப்போரே...............

அடித்து தின்று..
பிடித்து புணர்ந்து...
சிறுத்து வாழ்ந்த மாக்கள் நாம்..
மக்களாய் ஆனோம்..
இறை கோட்பாடு உதித்த கணத்தில்....!

"வல்லான் வகுத்ததே வாக்கு" என்றிருக்க
"நல்லான் மதிக்கும் மாண்பு " ஒன்றுதித்தது
இறை பொருள் உணர்ந்த தருணத்திலே...!

இறைவன் ஒருவன் உதித்த தருணம்
இதயங்கள் யாவும் இனித்த தருணம்..!

வழி ஒன்றே இல்லாதிருக்க....
வழித்துணையாய் இறைவன் வந்தான்...!

வரலாறு சொல்லும் மதப்போர் யாவும்
மண் மீது கொண்ட வெறியால் நிகழ்ந்தது..!

தேசம் பால் நேசம் கொண்டதனால்
தாயகம் காக்கும் தைரியம் கொண்டோம்..!

தமிழின் பால் காதல் கொண்டதனால்
மொழியை இன்றும் அனைத்திருக்கிறோம் ..!

இறைவன் பால் மதிப்பு கொண்டதால்..
மனிதம் அதை இதயத்தில் நிறுத்தியிருக்கிறோம்.!

பார்வையாளன் ஒருவன்
மேலே இல்லை என்று
மாற்றி விடுவீர்கள் ஆயின்....!

உங்களில் யார் மேற்பார்வையாளன்
என்று உங்களுக்குள்
போட்டி கொள்வீர்.........!

பின் ஒரு நாள்,
யுத்தம் செய்து...
ரத்தம் குடித்து...
வெற்றி புசித்து..
வெறி கொண்டு..
உங்களில் ஒருவன்
இடி முழக்கம் செய்வான்...
"கடவுள் ஒருவன் யாருமில்லை"
ஆதலின்,
"நானே இங்கு கடவுள் ஆகிறேன்" என்று.

எழுதியவர் : பாரதிசரண் (23-Apr-13, 2:19 pm)
பார்வை : 125

மேலே