"பெற்றோரை மதிப்போம் பேணிக்காப்போம்"

பகல் பொழுது பழுதடைந்து, பால்நிலவு பளிச்சிடும் நேரம்...
வீதியோர விரிசலில் விலாசமின்றி விழுந்துகிடக்கிறாள் பாவம்....
கேட்க நாதி இல்லை !!!
சொந்தம் என்று யாரும் இல்லை !!!
மருந்து வாங்க இல்லை காசும் !!!
இது மருமகள் செய்த மோசம் !!!
பெற்ற பிள்ளைக்குக்கூட இல்லை பாசம் !!!
கடந்த காலம் இவளை கைவிட்டது...
காழ்ப்புணர்ச்சி நெஞ்சுக்குள் துளிர்விட்டது...
பெற்ற பிள்ளை என்பதால் அதுவும் போய்விட்டது !!!
தேன் சொரியவந்த தேனீ கூட இன்று,,,
இவளின் இந்த நிலை கண்டு !!!
சற்று நேரம் நின்று..
கண்ணீரை காணிக்கையாகிவிட்டுச்சென்றது....
கருப்பை தன் பொறுப்பை உணராமல் போனதே
இவள் நிலைக்கு காரணம் !!!
அன்று தனகென்று என்னாது கொடுத்த உள்ளம்...
இன்று நிர்கதியாய் நிற்கின்ற அவலம்....
காப்பாற்றியது ஒரு தெய்வலோகம்....
அதுதான் நல்லோர்கள் நடத்தும் முதியோர் இல்லம்!!!
பெற்றோரை மதிப்போம் !!!
பேணிக்காப்போம்......
ஆதங்கத்துடன்,
ஜெகன்.ஜீ