என் அம்மாவிற்க்கு ஒரு கடிதம்...........

அன்புள்ள அம்மாவிற்க்கு உன் செல்லமகள் எழுதுவது .........
சொர்க்கத்தில் நீ இருப்பதாக பாட்டி சொன்னாங்க..
அங்கு உனக்கு ஒரு குறையும் இருக்காதாம் நீ ரொம்ப சந்தோசமாக இருப்பதாக என்னிடம் ஒவ்வொரு நாளும் பாட்டியியும், தாத்தாவும் சொல்கிறார்கள் அது உண்மையா அம்மா அப்படியென்றால் அங்கு என்னை ஏன்மா நீங்கள் கூட்டிசெல்லவில்லை ....

நான் இங்கு நல்லாவே இல்லையம்மா...என்னையும் உங்களுடன் கூட்டிச்சென்றிருக்கலாமே என்னை மட்டும் இங்கு தனியே தவிக்க விட்டு நீங்கள் மாட்டும் ஏன் சென்றீர்கள் எனக்கு இங்கு எதுவும் பிடிக்கவில்லையம்மா...நானும் உன்னிடம் வந்துவிடுகின்றேன்...அம்மா எப்பவும் நான் தனியாவேதான் இருக்கின்றேன் எனக்காக யாரும் இல்லை அம்மா பாட்டி சில வேலைகளில் என்னை பெத்தவங்கள தின்னுட்டியேடின்னு திட்டுறாங்கம்மா ..ஆஆஆஉனக்கு ஒன்று தெரியுமா ? நீ என்னை எவ்வளவு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவாய்....ஆனால் இப்போல்லாம் எனக்கு ஒரே பெயர்தான் அம்மா எல்லாரும் என்னை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? அம்மா அந்த பொண்ணு ஒரு "தாயை தின்னி " இப்படிதான் என்னை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்கள் அப்படியென்றால் நானா உன்னை ................பாட்டி சொன்னாங்க இங்கு நடப்பதையெல்லாம் மேல இருந்து நீங்கள் பார்ப்பீர்கள் என்று அதனால் தான் இந்த கடிதத்தை எழுதுகின்றேன் .இதை படித்துவிட்டு உடனே வந்து என்னையும் உன்னுடன் அழைத்துச்செல்லுங்கள்.....இன்னும் நிறையவே உன்னிடம் சொல்ல வேண்டும் போல் உள்ளது உன் மடியில் படுத்து அழ வேண்டும் .மனம் விட்டு ,மனம் திறந்து எல்லாம் சொல்லி அழ வேண்டும் அம்மா வா அம்மா என்னால் முடியவில்லை...........

இப்படிக்கு
யார் பாசமும் கிடைக்காத
அன்புக்காக ஏங்கும் உன் துரதிஸ்டசாலி மகள்.......தேன் துளி

எழுதியவர் : கவிதை தேவதை. (23-Apr-13, 5:26 pm)
சேர்த்தது : கவிதை தேவதை
பார்வை : 207

மேலே