கண்ணன் விளையாட்டு
சிறு குழந்தையாகும் பொழுது
சிறகை விரிக்கும் மனது
கண்ணனுக்கும் அதே வயது
குறும்புகார மனது
வானை அளக்க தெரிந்த கண்ணன்
குழந்தையான இறைவன்
யாவும் அறிந்த கள்வன்
மண்ணை தின்னும் மன்னன்
தாயின் மனது நோக
இவன் குறும்பு எல்லை மீற
பொறுமை இழந்த தாயோ
சினத்தின் எல்லைக்கு போக
வாய்தவறி சொன்னாள்
வாக்கு ஒன்று சொன்னாள்
உன் தாயை போல
உன் குறும்பும் உண்டு என்றாள்
சொல்லகூடாத செய்தி
சொல்லியதால் வேள்வி
தீயின்றி அவளும்
வார்த்தை சூட்டால் எரிந்தாள்
கேட்ட குறும்புக்கண்ணன்
தாய் யாரென அறிந்திடாத மன்னன்
அதிர்ச்சி கொண்டு தானும்
அதிர்ந்து போய் நின்றான்
எந்த குறை என்றாலும்
இறைவனிடம் சொல்வோம்
இறைவனுக்கே குறை என்றால்
எங்கு போய் சொல்வோம்
இரண்டு பேர்க்கும் மௌனம்
சொல்லிடாத சோகம்
தீயின்றி எரியும் தேகம்
ஆறாது என்றும் மனதின் காயம்
இருவர் மனதின் சோகம்
எந்த வார்த்தை கொண்டு சொல்ல
சொல்லும் நிலையின் வார்த்தை
தகுதி அந்த வார்த்தைக்கும் இல்ல