உங்கள் ராக்கெட்டும்… எனது மாட்டு வண்டியும்….!!

]]]]ஒரு விளக்கமும்.. சிறு கதையும்[[[[

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மதப் பிரச்சனைகளில் இருந்து ஓய்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நாட்டில் மதக் கலவரம் நடக்கிறதோ இல்லையோ தளத்தில் நன்றாகவே நடந்தது. வீதியில்கூட பிடிக்காவிட்டால் விலகிச் சென்று விடுவார்கள் இங்கே கவிதையால் குத்திக் குதறிக் கொண்டோம்.

இதைத்தான் வேண்டாம் என்கிறேன். கலையிடம் இதைத்தான் ஏடுத்து உரைத்தேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால்... அதை கலையின் கருத்துப் பகுதியில் பதிந்ததால் அவருக்கு சாதகமாய் பேசி விட்டேன் எனப் புரிந்து கொள்ளப்பட்டதாக நினைக்கிறேன்

மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டபோது கூட இந்த மோதல் வேண்டாம் என்பதையே எடுத்து உரைத்தேன்.

இந்தப் புயல் ஓய்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் பயல் "பிடிமானம் எங்கு என்பது புரிகிறதா?" என்ற கவிதையை படைத்தேன். ராஜா கார்த்திக் மென்மை அபிசார் ஹரி எனது கவிதைக்காகவே ஒவ்வொரு நொடியும் காத்திருக்கும் எனது நண்பர் ஜெயக்குமார்...மற்றும் எண்ணற்ற தளத்தின் நண்பர்களின் மனதில் தான் என் பிடிமானம் உள்ளது என்பதாக படைத்தேன்.

நிற்க.
இலக்கிய வட்டம்.. கனவு., வாராந்திர கருத்துப் பகிர்வுக் கூட்டம்., என்றெல்லாம் எத்தனையோ கூட்டங்களை பல ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்.சாகித்ய அகாடமி தேர்வுக் குழு உறுப்பினரும் முன்னனி எழுத்தாளருமான சுப்ரபாரதி மணியன்., சாமக் கோடங்கி ரவி., திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறை எழுதிய அனந்த குமார் ஐயா இன்னும் பலர் அதில் பங்கேற்பர்.

ஆயிரம் சர்ச்சைகள்., ஆயிரம் முரண்பாடுகள்., கோபம் தாபம் வேகம் எல்லாம் இருக்கும்... ஆனால் ஒரு நாள்., ஒரு விசயம்., ஒரு கருத்தில் கூட வார்த்தைகளை நாங்கள் விட்டதில்லை.[தகாத என்பதற்கு இடமே இல்லை. காரசாரமாய் விவாதித்ததை மொதல்களை... அத்துடன் முடித்துக் கொண்டு வழக்கம்போல... என் [அவர்கள் ரசிக்கும் என் கிராமியப் பேச்சை] பாணியில் பேசி அதன் பிறகு சூடா ஒரு கோப்பை தேனீரை அடுத்தவர் காசில் குடித்து விட்டு... அடுத்த கூட்டத்திற்கு நேரம் குறித்து விட்டு கிளம்புவோம்.

அந்த நிகழ்வுகள் எங்கே... இது எங்கே... இதை தவிர்க்கத்தான் நான் சமாதானத்தை பயன் பயன்படுத்தினேன். என் பதிவுகளை படியுங்கள் பொறுமையுடன். புரியும்...

நீங்கள் நெருப்பை அணைக்க வந்த தண்ணீர் லாரியை எண்ணை லாரியென முடிவு செய்து கொளுத்தி விட்டீர்கள். நான் எரிகிறேன்... எரிகிறேன் கொளுந்து விட்டு எரிகிறேன்... தண்ணீரும் பற்றி எரிகிறது பாருங்கள்...!!!

மீண்டும்... சொல்கிறென்.. தரமான படைப்புகளை கொடுங்கள்..தளத்தின் பெருமையை உயர்த்துங்கள்... வளமான வார்த்தையை [தரங்கெட்ட என்று கூட நான் குறிப்பிட விரும்பவில்லை] கையாளுங்கள்..கவிதையை வாழச் செய்யுங்கள்...!!!!

[[நாட்டுப்புரக் கதைகள்,. பேச்சு வழக்கு., வட்டாரக் கவிதைகள், கதைகள் அது வேறு படிமானம். அதில் நீங்கள் பாமரத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்]]

எழுத எழுத தமிழ் வளரும்... படிக்கப் படிக்க சிந்தனை வளரும்...

நினைவு ஒன்று வந்து இதன் இடையே மின்னலடித்துச் செல்கிறது.....

தளத்தில் எனது முதல் படைப்பு வெற்றிடம். கடைசி பதிவு ..
தனித்துவம் !
இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள சுவாரஷ்யங்கள் தான் எத்தனை எத்தனை...!!! இந்த இரண்டு வார்த்தைகள் புரிய வைப்பதுதான் என்ன என்ன!!!
எழுத்தாளர்களின் வாழ்வில் இப்படி எத்தனை அதிசயங்கள் பொதிந்து கிடக்கிறதோ!!!
******************************
******************************
வாங்க நம்ம வழிக்கு ………….

"ஏண்டா ட்ரைவர் எப்படி தவிக்கிறே..."
"வீட்டுக்கு அவசரமா போகுனும்"
அதனாலதான் மாட்டப் பூட்டி ரெடியா நிக்கிறியா. நாம தேடறப்போ காணம போய்டுவே.. என்னடா வீட்டுல விசேசம்..".
"ஒரு... விசேசம்..."
"இழுக்காதே...உன்ன திருத்த முடியாதடா"
"இப்போ மொதல்ல எங்கே போகணும்"
செல்ஃபோன் ஒன்னு வாங்கணும்டா"
"ஹி ஹி ஹீ"
"அதுக்கு ஏண்டா இப்பிடி"
"உங்களுக்குத்தான் அதுல பேசவே தெரியாதே"
"மானத்த வாங்கதடா யாரு காதுலயாவது விழப்போவுது"
"அபப்புறமா வேற எங்கே போறது.".
"தளத்தோட ஓனர் வீட்டுக்கு விடறா வண்டிய ..."
"அய்யயோ..அங்கே எதுக்காம்?"
"அழி ரப்பர் ஒன்னு வாங்கி வைக்கச் சொல்லறதுக்கு"
"முதலாளி... இப்பெல்லாம் ரொம்ப சூப்பர் சூப்பரா சிந்திக்கிறீங்க.. அறிவா பேசறீங்க."
"எல்லாம் தளத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தாண்டா. இப்போ புரியுதாடா!"
"... நல்லாத்தான் புரியிது...இப்போ இவரு நம்ம பொழப்ப கெடுத்திடுவார் போல இருக்கே.."
"என்னடா மொனகிறே.."
"ஒன்னுமில்லிங்க... இந்தத் தளத்தோட ஓனர் வீட்டுக்குப் போகச் சென்னீங்களே அது எங்கே இருக்குதுனு தெரியுமா..? [வாயை மூடிக் கொண்டு சிரிக்கிறான்]
"ஆமாண்டா... ஆமாண்டா.. எனக்குந் தெரியாதுடா ...நீ களத்து மேட்டுல நிக்கிறவன்னாலும் வெவறமாத்தாண்டா பேசறே".
ஆஸ்பத்திரிக்கு போலாம்.. தலை வலிக்குது..
"இன்னிக்கு அவ்வளவுதான்.. போ.."
"மறுபடியும் என்னடா மொனகல் "
"ஒரு.. டீ.. சாப்ட்டு...."
"..........எட்றா வண்டிய........."

[நன்றி ; "எட்றா வண்டிய" நாவல் ஆசிரியர் என் நண்பர் வா.மு.கோமு ., அவர்களுக்கு]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (26-Apr-13, 11:11 am)
பார்வை : 148

மேலே