வசந்த பூக்கள்

கடல் கடந்து
கப்பல் பல வாங்கி
===காணும் இடமெல்லாம்
===கட்டிடங்கள் கட்டி
கழுத்து நிறைய
ஆபரணங்கள் பூட்டி

வந்து போக வகையாய்
வாகனங்கள் கொண்டு
===கணக்கு நிறைய
===கறுப்பு பணமுடன் கூடிய
வசதி படைத்த வாழ்க்கை
தேவையில்லை ....

ஆசையாய் பேசிமகிழ
அளவானகுடும்பம்
===கலங்கி நிற்கையிலே
===தோள்தர தோழர்கள்
பசிக்கும் வேளையிலே
அக்கறையுடன் அன்னை

தடுக்கி விழுந்தால்
தலை தூக்கிவிட உடன்பிறப்பு
===குதுகலமாய் குதித்தாட
===குழந்தைசெல்வம்
அன்புடன் சண்டையிட
ஊடலுடன் கூடல்கொள்ளும் என்னவன்

இவைதான் வாழ்வை
சொர்க்கமாக்கும் வசந்த பூக்கள்
===உதிர்த்துவிடாமல்
===உயிரென மதியுங்கள்
வசந்த பூவை
சொர்க்கமாய் மாற்றுங்கள்

இறைவனிடம்
இறைந்து பாருங்கள்
===வசந்த பூவை என்வாழ்வில்
===வதைக்காதீர் என்று
இறந்தபின் சொர்க்கம் தேடி
சோகமாய் அலையாதீர்

வசந்த பூவை
அகங்காரத் தோரணையில்
அழித்துவிடாதீர்...

எழுதியவர் : bhanukl (26-Apr-13, 5:49 pm)
பார்வை : 150

மேலே