வீரத்தமிழினம்
என்று விடியும்
என்று தணியும்
இந்த
அடிமை மோகம் !
சுதந்திரம் பெற்றும்
தரித்திரம் பெற்ற
இந்தத்
தமிழனின் யோகம் !
சொந்த நாட்டில்
சொத்தை இழந்து
சொத்தையாய் வாழும்
இவன்
அடிமை யாகம் !
சேரன்,சோழன்,பாண்டியன்
வீரம் வளர்த்த எந்நாடு !
முல்லைக்குத் தேரீந்த வேந்தன்
கொடை வளர்த்த எந்நாடு !
இன்று
ஏன் சென்றது
என் இனம்
மண்ணோடு ?
ராட்சதர் வாழும்
அண்டை நாட்டில்
பேசத் தொண்டை
இழந்தனரோ?
அடிமைப் பட்டு
உதிரம் செரிய
இந்த பூமியில்
சாகப் பிறந்தனரோ ?
தமிழினப் பெண்கள்
மானம் இழக்க
வானம் பார்திருந்ததோ ?
தமிழின மழலை
மண்ணில் புதைய
நிலமும் விரும்பியதோ ?
தமிழினம் என்றால்
தனக்குக் கீழே
என எண்ணும்
மானிடரே !
தக்கதோர் உண்மை
உரைப்பேன்; உங்கள்
செவியைத் தீட்டுங்கள் !
காலைச் சூரியன்
உதிக்கும் முன்
மூடுபனியும் வானை
ஆள்ந்திடுமே !
வெப்பக் கதிரவன்
முளைத்தால்
எப்பனியும் ஓடி
ஒளிந்திடுமே !
யானை ஓநாய்
எலிகள் நரிகள்
சேர்ந்தால்
புலிகள் பயந்திடுமா ?
கையை ஓங்கி
செவிட்டில் அறைந்து
இரண்டாய்
கிழித்திடுமே !
எந்தன் இனம்
சென்றிருக்கலாம்
மண்ணோடு !
வீரம் சாகவில்லை
வாழ்கிறது
நெஞ்சோடு !
தன்னைத் தாக்க
யார் வரினும்
பூனைகள் பயந்திடுமே !
புலிகள் பயந்திடுமா ?
பூனை கூட
ஓரிடம் சென்று
திருப்பித் தாக்கிடுமே !
புலிகளுக்கென்ன ! நின்ற இடம் திரும்பி
உயிரைப் பறித்திடுமே !
வேலை வந்தால்
வாளை ஏந்தும்
வீரம் அறிந்திடுவோம் !
நேரம் வந்தால்- உன்
நேரம் தீர்க்கும்
தீரம் அறிந்திடுவோம் !
உம்மை அழிக்க
எங்களுக்கு தோட்டாக்கள்
வேண்டாம் !
விழித்துப் பார்த்தே
அழித்து விடுவோம் !
எந்தன் மக்கள்
சிந்தும்
ஒருதுளிக் கண்ணீர் !
விலையாய் எடுப்போம்
உந்தன் உடலில்
பல துளி செந்நீர் !