பாவேந்தர் பாரதிதாசன்
பா சூடி வேந்தனாக
பகை நடுங்கும்
போர்க் குரலாக -ஒலித்த இவன்
கவியாவும் -தமிழர் என்ற
உணர்ச்சி தழைக்க
ஊன்றிய வேராகும்..
பாரதியின் தாசனாய்
பைந்தமிழை இவன் சுவைக்க
சாதி மத மடமையிலே
பெண்ணடிமை பேய் ஏவும்
மூடர்களை மூர்ச்சையாக்க
முழு நாளும் கவிப் படைத்தான்
முன்னோக்கி சென்றிடவே தமிழர் !
இல்லாத இந்தியம்
செல்லாத தந்திரம்
வெல்லாது இத் தினம்
விலையாகும் அவனிடம்
விடுதலைக் களமாடு தமிழராய்
விடியல் பிறக்கும் தமிழ் நாடாய் !

