திருக்குறளே தேசிய நூல்
திருக்குறளே தேசிய நூல்
முதலடி முழுமையடைய
தொடர்ந்த அடி தொங்கி நிற்க
தொடுத்ததெல்லாம் தொண்மையெனினும்
இன்மையிலும் இனிமையன்றோ!
அறிவின் அறமன்றோ!
உணர்ச்சியின் உயர்வன்றோ!
சமுக அரசியல் நாகரீகம்
முறைபடுத்துவதற்கே உத்திரவேதம்
எப்பாலுக்கும் ஏற்றதோர் முப்பால்
நிற்கும் காலத்திற்கு அப்பால்
குறளடி நிற்பார் நிறைவடைவார்
வாழ்வுதனில் வளமடைவார்
அகத்திலும் புறத்திலும் நெறியடைய
சுற்று புறத்திலும் ஒருமையடைய
சான்றோன் - வள்ளுவன் வடித்ததோர் மறை
அதுவே உலக பொதுமறை!