ஒரு தாயின் கடிதம் கவிதையாய்

இன்றுபோல் நினைக்கிறேன் அன்று
நீ குழந்தையாய் என் மடியில்
குட்டி கவிதையாய் என் நெஞ்சில்
இன்றோ நீ எங்கயோ நான் எங்கயோ

நம்மை பிரித்தது காலம்
சுழலும் ஒரு மாயம்
எத்தனை நீ உயர்ந்தாலும் என் பிள்ளைதான்
என் சிந்தனை என்றும் உன் நிழலாய்

உன்னை தொட்டு பார்த்து நாளாகிறது
தொடுகிறேன் நினைவால் தினம் தினம்
கடிதம் எழுத கூட மறைக்கிறது கண்கள்
சின்னசின்ன தவறுகள் புரியும்
என் கடிதத்தில் உனக்கு புரியும்
என் அவா என்னவென்று தெரியும்

மாதமொருமுறை வந்துவிட்டு போன நீ
மறந்து போனாயோ என்னை என்று
நினைவுட்ட எழுதுகிறேன் இந்த கடிதம்
காற்றில் கரையும் என் உயிர் படிகம்

உன்னிடம் வேண்டுவது ஒரு பிடிசோறல்ல
பணம் நகை அல்ல
நீ நலமாய் இருகிறாய் என பதில் கடிதமும்
உன்கையால் என் இறுதி பயணமும்

வந்து விடு கண்ணே
பயணம் தொடங்கும் முன்
அடுத்த கடிதம் தந்தியாக கூட இருக்கலாம்
முந்தி கொண்டு வா என் பிள்ளையாய் மீண்டும்

எழுதியவர் : ருத்ரன் (9-May-13, 6:36 pm)
பார்வை : 232

மேலே