சக்தி வருகை
.............................விநாயர் துதி...................
முந்தி விநாயகனே -எனது
====முன்வினை முடிச்சை அவிழ்பவனே
சிந்திடும் யோக வியர்வையிலே -எனது
====இச்ஜென்ம நலவாழ்வை அமைப்பவனே
உனது திருவடி பணிந்திட்டேன் -நின்
====அருள்மழையை எனதாத்மாவில்
-பொழிவாயே!!!!!
**********************************************************************
....................................சக்தி துதி........................
ஜகத்தினை அளக்கும் காளிமாதா
====அகத்திணை அணைத்திட வருவாயே
பயத்தினை முழுதும் நீ விழுங்கி
====வீரத்தின் கனல்அனைத்தும் தருவாயே
நீயே சக்தி நீயே ஜகத் சாம்பவி
====அண்டசராசரத்தில் அசைபவள் நீயே
சிம்மவாகினி சியாமளரூபினி
====நித்யபிரவாக வாழ்வினை அருள்வாயே !!!!
இராயிரம் கண்கொண்டவளே -இன்பத்தின்
==== பரப்ரம்மம் ஆனவளே -ஆற்றிடும்
பணிகளிலே முழு வெற்றியை ஈபவளே
====பற்றினை அறுக்கும் நல்பக்தியை தருவாயே
இந்திரியம் அனைத்திலும் நித்ய
====சௌந்தரியம் நீ தந்து ஞான வாசல்
-அமைப்பாயே
கருமாரி எனது கருமாற்றி அந்த
====ஆயிரம் இதழ் தாமரையில் பதிப்பாயே !!!!
நித்யசௌந்தரி நீலவிசும்பிணி வித்யா
====வாசினி வித்தைஅனைத்தும் அருள்வாயே
சத்திய சௌந்தரியத்தை சத்தமில்லாமல்
====எனக்களித்து சித்தம் ஒளியுர செய்வாயே
சுத்த கனலை சூக்கும சரீரத்தில் பரப்பி
====எனது பிறவி பாவமூட்டையை எரிப்பாயே
சாந்த ஸ்வரூபணி சாந்தத்தை என்னுள்
====புகுத்தி ஆன்மிக சாதகனாய் ஆக்குவாயே!!!!
பேரண்ட நாயகி இப்பிண்ட பினியாவும் -உனது
====வாசத்தினாலே இனிவாராது நீ போக்கி
-அருள்வாயே
மனவேதனையாவும் மண்ணுள் புதைத்தழித்து
====உனது கண்ணின் மணி போல எனை காப்பாயே
சக்திதான் சகலமும் எனும் புத்தியை -என்னுள்
==== புகுத்தி முக்திபேறு இன்னொடியில் ஈவாயே
இனியொரு ஜென்மம் யான் வேண்டேன்
====இருப்பினும் யோகியாகும் வரம் தருவாயே!!!!!
************************************************************************
அன்புடன்
கார்த்திக்

