நரகமாய் மாறிய நகரத்தின் ஏக்கம்
என் சோகத்தை யாரிடம் சொல்வேன் பலரிடம் சென்று சொல்லி பார்க்கிறேன் ஆனால் அதற்கு முடிவு சொல்ல யார் உண்டு
அழகான என் மேனி மீது கற்றைவீசி சிரித்த பசுமையான மரங்கள் எங்கே ???
அதின் மீது பாடி திரிந்த பறவைகள் எங்கே
ஒய்யாரமாய் ஓடி விளையாடிய பல விலங்குகள் எங்கே ???
அதன் உறவுகள் எங்கே
இவை அனைத்திற்கும் அடைக்கலம் கொடுத்த ஓங்கிய மலைகள் எங்கே ???
அதன் குறுக்கே ஓடிய வற்றாத நதிகள் எங்கே
அமைதியாய் அன்போடும் பண்போடு வாழ்ந்த அந்த மக்கள் எங்கே ???
அவர்களின் வாழ்க்கை எங்கே
என்னை தான் அளித்தாய் என் நிம்மதியை கெடுத்தாய் என்று நினைத்தேன் இப்போது புரிகிறது மனித நீ என்னை மட்டும் அல்ல உன்னையே அழித்து கொண்டுள்ளாய்
என்மேனியோ இப்போது துவண்டு விட்டது நன் சுவாசிக்க முடியாத நிலை வந்து விட்டது
இவ்வளவு நாட்களாக உங்களை பாதுகாத்த எனக்கு நீங்கள் அளித்த பரிசோ வியக்கதகுன்தது என்று
இப்போது உள்ள கிராமத்தை பார்த்து இயற்க்கை அழகை தொலைத்து விட்டு ஏங்குகிறது நகரம்
அதற்கு தெரியாது ஒரு நாள் அதுவும் இந்த நிலை ஆகும் என்று

