நிறைவடையாத ஆசைகளோடு

பறந்து விரிந்த உலக வாழ்க்கை
அலைந்து திரியும் மனித பிறவி
தேடி முடியாத தேடல்கள் தினமும்
நிரப்ப முடியாத ஆசை கொண்ட மனமும் ...........

காலை முதல் மாலை வரை
கருவறை முதல் கல்லறைவரை
ஓய்வில்லாத போராட்டம் இது
முடிவிலாத போராட்டம் இது ..............

ஆளுக்கொரு ஆசை
ஆளை மிஞ்சும் ஆசை
அவதிப்படும் ஆசை
அர்தமற்ற ஆசை ..............

நிறைவடையா ஆசைகள்
நீண்டு வரும் ஆசைகள்
நிம்மதியை கெடுக்கும் ஆசைகள்
நீர்த்து போகும் ஆசைகள் ...............

அறிவை குழப்பும் ஆசைகள்
அழிவை தரும் ஆசைகள்
ஆவி உலகம் போன பின்பும்
அடங்காத ஆசைகள் ...............

அண்டங்கள் போலவே
ஆசைகள் நீல , அறிவு சுருகி
ஆயுளும் சுருகி நிறைவடையாத ஆசைகளோடு
நீர்த்துபோகிறான் மனிதன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-May-13, 3:14 pm)
பார்வை : 137

மேலே