பொறுப்பான காதல் வாழ்க!!

அய்யய்யோ !
காதல் மிகப்பொல்லாததோ--அது
வெட்கம் மானம் இல்லாததோ!..
நன்றி கெட்ட பாவமதோ!
நாலுபேரின் கோபமதோ!

சுமந்து பெற்ற தாயைத் துறந்து
சுமந்து காத்த தந்தை பகைத்து,
வளர்ந்தோமென்ற திமிரெடுத்து,
வளர்த்த நன்றி மறக்கலாகுது!

கண்ணீரைப் பரிசளித்து.
கடன்பட்டோரைக் கலங்கவைத்து,
என்ன பயன் காணுவதோ!
பின்னும் ஏன் வருந்துவதோ!

வெட்கங்கெட்டுப் போனபின்
விட்டுத்தான் என்ன செய்ய!
மானங்கெட்டுப் போனபின்
மறந்துதான் என்ன செய்ய!

காதலை வேண்டாமென்று
கட்டாயம் சொல்லவில்லை!
வேதனைகள் நேராமல்
விளையும் காதல் வாழ்கவே

பொருந்துவது தேடிப்பார்தது
பொறுப்போடு காதல் செய்து
ஊரறிய உறவு சொல்லி
உலகறிய வாழ்க வாழ்கவே!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (19-May-13, 6:20 pm)
பார்வை : 121

மேலே