தோல்வி நிரந்தரமல்ல
கண் விழித்ததும் களைந்த குப்பைகள்
காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும்
மீட்சியே மீள்வதாய் காலம் கழியும்
விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும்
மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓடும்
காதடைக்கும் கானம் கேள்வியாய் பிறக்கும்
சட்டென்று சொல்லி சந்தோஷ படுகையில்
சங்கடங்கள் ஒன்றிரண்டு கைவிரல் கோர்க்கும்
வேதனை விரக்தியினாலும் சாதனை தொடரும்
சோதனை காட்சியெல்லாம் சோலையாகும்
சாலைகள் எங்கும் மாலையாகி மணங்கமழும்
சாஸ்டாங்கமாய் உன்னிலை மறந்து நீ வீழ்வாய்
வெற்றியின் கரத்தின் விடிவெள்ளியாய்
ஒவ்வொரு தோல்வியிலும் உன்
பெயரிருந்தால் வெற்றியின் முகவரி
உன்னை தேடிக் கொண்டிருக்கும்
தோல்வி நிரந்தரமல்ல
தோல்விதான் வெற்றியின் வாசலே
வெற்றிக்காக போராடுவோம்
தோல்வியை தோளில் சுமந்து கொண்டு /.