போராட்டம் .....
நீ கடக்கும் பாதையெங்கும்
சொற்பம் இருந்த போதிலும் ,
அற்பம் என்று எண்ணி நீயும்
பயணம் நோக்கி கடந்திடு..
நீ விளிக்கும் முகங்கலெல்லாம்
விஷங்கள் என்று தோனினும்,
புஷ்பமுகம் ஒன்று காட்டி,
புயலை தகர்த்து சென்றிடு..
வறுமைவந்து உன்வாயில்
வாக்கருசி போட்டினும் ,
இல்லை என்று வந்தவர்க்கு
இல்லம் அழைத்து அமர்த்திடு..
உன்னைச்சுற்றி இருக்கும் வாழ்க்கை
இருளில் இருந்த போதிலும் ,
ஒளி நிறைந்த பகுதியென்றும்
உயரமிருந்த போதிலும் ,
சிரத்தை உண்டு முயற்சி கொண்டு
இலக்கை நீயும் அடைந்திடு ..
----படித்ததில் பிடித்தது!----