நீ எனக்கானவள்...
கொசுக்கள் என் காதோரம்
வந்து சண்டை
இடுவதற்கான காரணம்
நீ இன்றி
நான் தூங்குவதால்...
ஆர்ப்பரிக்கும் கடல்
அழுது கொண்டே
இருக்கிறது
நாம் இன்னும் பிரிந்து
இருப்பதால்...
நாம் சேர்வதைக் காணத்தான்
அனுதினமும் உதிக்கிறான்
சூரியன்...
காற்றில் கூட
ஈரப்பதம் அதிகரிக்கிறது
நீ இன்றி
நான் அழுவதால்...
நீ எனக்கானவள்
என்பதை நிலவு ஆறுதல்
கூறியும்
சமாதானம் அடையாமல்
சரக்கு அடிக்கச்
செல்கிறேன்...

