விவசாயியின் குமுறல்

விட்டத்தை பார்த்து திட்டத்தை போட்டோம்
திட்டமெல்லாம் தீண்டதகாததாய் மாறிப் போச்சு

காத்திருந்த கனவெல்லாம் கண்ணீரில் கரையுது
கற்பனை ஒன்றுதா இப்போ நெஞ்சில் நிக்குது

அரசின் வாக்குறுதி இப்போ அம்மணமா நிக்குது
எங்கள் அடிவயிறு மட்டும் அரவேக்காடா கிடக்குது

ஓடி ஆடி உழைச்ச உடம்பு உருகுலஞ்சு போச்சு
ஊருக்கெல்லாம் எங்க உசிரு ஏளனமா போச்சு

இயற்கை கூட செயற்கை எதிரியாத்தா நிக்குது
வாழ்க்கை கூட வெறித்தனமா போர்கைய தூக்குது

உசிர மட்டும் வைச்சுகிட்டு உலவி வர்றோம்
வைரம்பாஞ்ச உடம்புன்னு உலகம் சொல்லுது

ஊருக்காக வாழவா? உசிரபோக்கவா?
வழிசொல்ல வெறுங்கைதா விரக்தியா இருக்குது

நிழல்கூட இப்போ திரும்பித்தா நடக்குது
நாதியிலாம நாமட்டும் நடைபிணமா தனியாக/.

எழுதியவர் : ஸ்ருதிஹா (19-May-13, 7:33 pm)
பார்வை : 85

மேலே